யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை
சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 ஜனவரி 2009   ( 10:02 IST )
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலையால் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வங்கக் கடலில் இலங்கை, தமிழகக் கடலோரத்தையொட்டி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களின் சில இடங்களில் மழை பெய்யக் கூடும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் இருக்கும். நகரின் சில பகுதிகளில் அவ்வப்போது லேசான மழை இருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நெற்பயிர்கள் சேதம்:

இதற்கிடையே சென்னை, திருவாரூர், நாகப்பட்டிணம் மாவட்டங்களில் நேற்று பிற்பகல் முதல் மிதமான மழை பெய்தது. சென்னையில் இரவு முழுவதும் மழை பெய்து கொண்டே இருந்தது.

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் தற்போது பெய்த மழையால் அறுவடைக்கு காத்திருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்னையில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு
அவதூறு பிரச்சாரம்: ஜெ.வுக்கு நோட்டீஸ்
மழை நிவாரணம் ரூ. 1000 கோடி தேவை: கருணாநிதி
ஓட்டுச்சாவடிகளில் வீடியோப்பதிவு : நரேஷ்குப்தா
மன்மோகன் உருவ பொம்மை எரிப்பு: 30 பேர் கைது
பணம் கொடுத்ததாக புகார்: ‌ஸ்டா‌லி‌ன் ‌மீது வழ‌க்கு
செய்திகள்
தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது....
மேலும் படிக்க|மேலும்...