|
| சென்னையில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு |
| சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 ஜனவரி 2009 ( 09:49 IST ) | |
சென்னையில் நடைபெறும் இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறும் 'வெளிநாடு வாழ் இந்தியத் தொழில் முனைவோர் மாநாடு' (பிரவாசி பாரதிய திவஸ்) மற்றும் போர் நினைவு சின்னத்திலிருந்து மதுரவாயல் வரை அமைக்கப்படவிருக்கும் விரைவு சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா ஆகியவற்றில் பிரதமர் மன்மோகன் சிங் இன்று கலந்து கொள்கிறார்.
இதற்காக நேற்றிரவு தனி விமானம் மூலம் பிரதமர் மன்மோகன் சிங் சென்னை வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, முதல்வர் கருணாநிதி ஆகியோர் பொன்னாடை போர்த்தியும், பூங்கொத்து கொடுத்தும் பிரதமரை வரவேற்றனர்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், ஈவிகேஎஸ். இளங்கோவன், டி.ஆர். பாலு, வேங்கடபதி, வயலார் ரவி, நாராயணசாமி, மற்றும் தமிழக அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வரவேற்புக்குப் பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் கார் மூலம் ராஜ்பவனுக்குச் சென்றார். இரவு ஆளுநர் மாளிகையில் தங்கினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|