யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
அவதூறு பிரச்சாரம்: ஜெ.வுக்கு நோட்டீஸ்
திருமங்கலம் (எஜென்சி), வியாழக்கிழமை, 8 ஜனவரி 2009   ( 09:33 IST )
தேர்தல் பிரசாரத்தில் காவல்துறையினரை அவதூறாகப் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி, அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்கறிஞர் சீதாராமன் என்பவர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், ஜனவரி 3, 4 ஆம் தேதிகளில் திருமங்கலம் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் காவல் துறைக்கு அவதூறு ஏற்படும் வகையில் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொது மக்கள் மத்தியில் காவல்துறையின் மதிப்பும், மரியாதையும் குறைந்துள்ளதாகவும், சட்டப் பூர்வமாக பணியாற்ற வேண்டிய காவலர்கள் நிம்மதியற்ற சூழ்நிலையில், அச்ச உணர்வோடு பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

இதனால் காவல்துறையினருக்கு மன ரீதியாக உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும், நோட்டீஸ் கிடைத்த 7 நாட்களுக்குள் இத்தகைய அவதூறு பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர நேரிடும் என்றும், வழக்கறிஞர் சீதாராமன் தனது நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மழை நிவாரணம் ரூ. 1000 கோடி தேவை: கருணாநிதி
ஓட்டுச்சாவடிகளில் வீடியோப்பதிவு : நரேஷ்குப்தா
மன்மோகன் உருவ பொம்மை எரிப்பு: 30 பேர் கைது
பணம் கொடுத்ததாக புகார்: ‌ஸ்டா‌லி‌ன் ‌மீது வழ‌க்கு
திருமங்கலத்தில் பிரச்சாரம் ஓய்ந்தது
ஈழ ஆதரவு கட்சிகளுடன் ஆலோசனை: வி.சி.
செய்திகள்
தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது....
மேலும் படிக்க|மேலும்...