|
| மழை நிவாரணம் ரூ. 1000 கோடி தேவை: கருணாநிதி |
| சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 ஜனவரி 2009 ( 09:19 IST ) | |
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ. 1000 கோடியை வழங்க வேண்டும் என்று, பிரதமரிடம் முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்றிரவு ஆளுநர் மாளிகையில் முதல்வர் கருணாநிதி சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்திற்கு தேவையான பல்வேறு திட்டங்களுக்கு நிதியுதவிகளைக் கோரினார்.
இது தொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கடந்த நவம்பரில் தமிழகத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொது மக்களுக்கு நிவாரண உதவியாக தமிழக அரசு இதுவரை ரூ. 950 கோடி வழங்கியுள்ளது.
மத்திய அரசு ஏற்கனவே ரூ. 200 கோடியை முன்பணமாக வழங்கும் என்று அறிவித்தது. ஆனால் இதுவரை அந்த நிதியுதவி கிடைக்காததால், தேசிய இயற்கை பேரிடர் மற்றும் எதிர்பாரா செலவின நிதியில் இருந்து ரூ. 1000 கோடியை உடனடியாக விடுவிக்கும்படி பிரதமரை முதல்வர் கேட்டுக் கொண்டார்.
தமிழகத்தில் மதிப்பு கூட்டு வரியை நடைமுறைப்படுத்தியதால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில் மத்திய அரசு ரூ. 2 ஆயிரத்து 500 கோடி அளிக்க வேண்டியுள்ளது. மத்திய விற்பனை வரியிலிருந்து ரூ. 1000 கோடி அனுமதிக்கப்பட வேண்டியுள்ளது.
ரூ. 7 ஆயிரம் கோடி அளவில் கூட்டுறவு கடன்களை ரத்து செய்ததால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் வகையில் ரூ. 3 ஆயிரத்து 27 கோடியே 80 லட்சம், மத்திய அரசின் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் மேலும் ரூ. 159 கோடி என, மொத்தம் 3 ஆயிரத்து 187 கோடியே 40 லட்ச ரூபாய் தமிழக அரசுக்கு அனுமதிக்கும்படி பிரதமரை முதல்வர் கேட்டுக் கொண்டார்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை வழங்கும்படியும் முதல்வர் கோரிக்கை விடுத்தார்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|