யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
ஓட்டுச்சாவடிகளில் வீடியோப்பதிவு : நரேஷ்குப்தா
மதுரை (ஏஜென்சி ), புதன்கிழமை, 7 ஜனவரி 2009   ( 19:04 IST )
திருமங்கலம் இடைத்தேர்தலில் பாதுகாப்பு நடவடிக்கையாக, வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகள் வீடியோவில் படம் பிடிக்கப்படும் என்று தமிழக தலைமை அதிகாரி நரேஷ்குப்தா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருமங்கலம் இடைத்தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகள் வீடியோவில் படம் பிடிக்கப்படும். இதற்காக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வீடியோகிராபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் யாருக்கு வாக்களிக்கின்றனர் என்பது படம்பிடிக்கப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த சில தினங்களாக திருமங்கலம் தொகுதியில் நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.

இதனால், முக்கியப் பிரமுகர்கள் உள்ளிட்ட வாக்காளர்கள் அல்லாதவர்களை இன்று மாலைக்குள் தொகுதியில் இருந்து வெளியேற்ற காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மன்மோகன் உருவ பொம்மை எரிப்பு: 30 பேர் கைது
பணம் கொடுத்ததாக புகார்: ‌ஸ்டா‌லி‌ன் ‌மீது வழ‌க்கு
திருமங்கலத்தில் பிரச்சாரம் ஓய்ந்தது
ஈழ ஆதரவு கட்சிகளுடன் ஆலோசனை: வி.சி.
லாரி ஸ்டிரைக்: குன்னூரில் தேயிலை தேக்கம்
இன்றிரவு சென்னை வருகிறார் பிரதமர்
செய்திகள்
தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது....
மேலும் படிக்க|மேலும்...