யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
மன்மோகன் உருவ பொம்மை எரிப்பு: 30 பேர் கைது
சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 7 ஜனவரி 2009   ( 18:43 IST )
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பிரதமர் ‌ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்‌கி‌ன் உருவப்பொம்மையை எரித்த புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பினர் 30 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய தமிழக அரசு மற்றும் தமிழ் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். னால், மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், சென்னையில் நடைபெறும் வெளிநாட்டு வாழ் இந்தியர் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் இன்று இரவு சென்னை வருகிறார்.

இதற்கிடையே, இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், பிரதமர் மன்மோகன் சிங்கின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் நடத்த புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பினர் ஏற்பாடு செய்தனர். ஆனால் காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.

எனினும், அந்த அமைப்பினர் சென்னை மெமோரியல் ஹால் அருகே பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கின் உருவப்பொம்மையை கொளுத்தினர். அப்போது பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எதிராகவும் கோஷமிட்டனர். இதனால், அந்த அமைப்பை சேர்ந்த 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பணம் கொடுத்ததாக புகார்: ‌ஸ்டா‌லி‌ன் ‌மீது வழ‌க்கு
திருமங்கலத்தில் பிரச்சாரம் ஓய்ந்தது
ஈழ ஆதரவு கட்சிகளுடன் ஆலோசனை: வி.சி.
லாரி ஸ்டிரைக்: குன்னூரில் தேயிலை தேக்கம்
இன்றிரவு சென்னை வருகிறார் பிரதமர்
நினைத்ததும் பிரணாப் இலங்கை செல்ல முடியாது: பாலு
செய்திகள்
தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது....
மேலும் படிக்க|மேலும்...