|
| பணம் கொடுத்ததாக புகார்: ஸ்டாலின் மீது வழக்கு |
| மதுரை (ஏஜென்சி), புதன்கிழமை, 7 ஜனவரி 2009 ( 18:42 IST ) | |
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது திருமங்கலம் காவல்துறையினர் இன்று வழக்குப்பதிவு செய்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது.
இரு தினங்களுக்கு முன்பு, தேர்தல் பிரச்சாரத்தின் போது, வாக்காளர்களுக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக வீடியோ காட்சிகளுடன் செய்திகள் வெளியாகின. இதன் எதிரொலியாக, ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து, திருமங்கலம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) ஷாஜஹானிடம் திருமங்கலம் தொகுதி தேர்தல் அதிகாரி ராமச்சந்திரன் புகார் அளித்தார். அதில், தேர்தல் விதிமுறையை மீறி வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததற்காக ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்திருந்தார்.
அதையேற்று, ஸ்டாலின் மீது போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்தனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|