|
| ஈழ ஆதரவு கட்சிகளுடன் ஆலோசனை: வி.சி. |
| சென்னை (ஏஜென்சி), 7 ஜனவரி 2009 ( 15:29 IST ) | |
சென்னையில் வரும் 10 ஆம் தேதி தமிழீழ ஆதரவு கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் உள்ள தமிழீழ விடுதலையை ஆதரிக்கும் கட்சி தலைவர்களுடன் விடுதலைச் சிறுத்தைகள் கலந்தாய்வு செய்து வருகிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ், திக தலைவர் கி.வீரமணி, பழ.நெடுமாறன் ஆகியோரை சந்தித்து பேசியிருப்பதுடன், மேலும் சிலரை சந்திக்கவும் முயன்று வருகிறோம்.
இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகளின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் வரும் 9 ஆம் தேதி சென்னையில் கூடி விவாதிக்கும்.
தமிழீழ ஆதரவு கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் கூட்டணி வரம்புகளை மீறி ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்த, ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இது தொடர்பாக வரும் 10ஆம் தேதி சென்னையில் கூடி முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|