யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
லாரி ஸ்டிரைக்: குன்னூரில் தேயிலை தேக்கம்
குன்னூர் (ஏஜென்சி), புதன்கிழமை, 7 ஜனவரி 2009   ( 14:08 IST )
லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக குன்னூரில் சுமார் 60 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் தேக்கமடைந்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள குடோன்களில் வைக்கப்பட்டிருக்கும் தேயிலைத்தூள், நாட்டின் மற்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ரூ. 10 கோடி மதிப்புள்ள சுமார் 60 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் தேங்கியுள்ளதாக, தேயிலைத்தூள் வர்த்தகர்கள் வட்டாரங்கள் தெரிவித்தன.

வேலைநிறுத்தம் காரணமாக தேயிலை வியாபாரிகள், தேயிலைத்தூள் மூட்டை ஏற்றி- இறக்கும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இன்றிரவு சென்னை வருகிறார் பிரதமர்
நினைத்ததும் பிரணாப் இலங்கை செல்ல முடியாது: பாலு
திருமங்கலம் விதிமீறல்: கோபால்சாமி வேதனை
சென்னையில் லஷ்கர்- இ- தொய்பா ஊடுருவல்?
திமுக ‌மீது நடவடிக்கை: சு.சாமி கோரிக்கை
செ‌ன்னை பு‌த்த‌க க‌ண்கா‌ட்‌சி: ஜன.8 ல் துவக்கம்
செய்திகள்
சர்வதேசம் - இலங்கையில் தமிழர்களுக்கு ஆதரவான நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தனியார் வானொலி, தொலைக்காட்சி நிலையங்களை ஆயுதமேந்திய கும்பல் தாக்கிச் சேதப்படுத்தியது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது....
மேலும் படிக்க|மேலும்...