|
| இன்றிரவு சென்னை வருகிறார் பிரதமர் |
| சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 7 ஜனவரி 2009 ( 13:41 IST ) | |
வெளிநாடு வாழ் இந்தியத் தொழில் முனைவோர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் இன்றிரவு சென்னை வருகிறார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று தொடங்கி வரும் 9 ஆம் தேதி வரை 'வெளிநாடு வாழ் இந்தியத் தொழில் முனைவோர் மாநாடு' (பிரவாசி பாரதிய திவஸ்) நடைபெறுகிறது.
மாநாட்டின் 2-ஆம் நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் இன்றிரவு சென்னைக்கு வருகிறார். மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கலந்து கொள்கிறார்.
இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, முதலவர் கருணாநிதி ஆகியோரும் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.
மொரீஷியர் துணை அதிபர், இலங்கை, தென் ஆப்ரிக்கா, சிங்கப்பூர் நாடுகளின் அமைச்சர்கள், இந்தியாவின் பல்வேறு மாநில முதல்வர்கள் உட்பட சுமார் 1500 பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
இந்த மாநாட்டுக்கு மிரட்டல் கடிதம் விடுக்கப்பட்டுள்ளதால், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் சென்னை வர்த்தக மையம், கமாண்டோ படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளில் சுமார் 3,600 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - இலங்கையில் தமிழர்களுக்கு ஆதரவான நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தனியார் வானொலி, தொலைக்காட்சி நிலையங்களை ஆயுதமேந்திய கும்பல் தாக்கிச் சேதப்படுத்தியது... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|