யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
நினைத்ததும் பிரணாப் இலங்கை செல்ல முடியாது: பாலு
சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 7 ஜனவரி 2009   ( 09:59 IST )
பேச்சு நடத்துவதற்கு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை நினைத்தவுடன் இலங்கைக்கு அனுப்பி வைக்க முடியாது. இதற்கு அந்த நாடு இன்னமும் தயாராக இல்லை என்று மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் வெளிநாடு ஒன்றுடன் பேச்சு வார்த்தையை நினைத்தவுடன் தொடங்கிவிட முடியாது. கதவை உடைத்துக் கொண்டு அங்கு போக முடியாது.

இந்தியாவுடன் பேச்சு நடத்த இலங்கை இன்னமும் தயாராகவில்லை. தற்போதைய சூழ்நிலையில் பிரணாப் முகர்ஜி உடனடியாக இலங்கை செல்வது சாத்தியமல்ல.

இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு நேர்மையுடன் நடந்து கொள்கிறது. மெத்தனம் காட்டுவதாகக் கூறுவது தவறு. இந்த விவகாரத்தை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார்.

டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். விலைக் குறைப்பை உடனடியாகச் செய்ய முடியாது.

வேலை நிறுத்தத்தை லாரி உரிமையாளர்கள் தீவிரப்படுத்தி, அதன் மூலம் லாரி உரிமங்கள் ரத்து செய்யும் அளவுக்கு மத்திய அரசை அவர்கள் நிர்பந்திக்க வைக்கக் கூடாது.

இவ்வாறு டி.ஆர். பாலு கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
திருமங்கலம் விதிமீறல்: கோபால்சாமி வேதனை
சென்னையில் லஷ்கர்- இ- தொய்பா ஊடுருவல்?
திமுக ‌மீது நடவடிக்கை: சு.சாமி கோரிக்கை
செ‌ன்னை பு‌த்த‌க க‌ண்கா‌ட்‌சி: ஜன.8 ல் துவக்கம்
வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு
8-ல் ஜனாதிபதி, பிரதமர் தமிழகம் வருகை
செய்திகள்
சர்வதேசம் - இலங்கையில் தமிழர்களுக்கு ஆதரவான நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தனியார் வானொலி, தொலைக்காட்சி நிலையங்களை ஆயுதமேந்திய கும்பல் தாக்கிச் சேதப்படுத்தியது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது....
மேலும் படிக்க|மேலும்...