|
| திருமங்கலம் விதிமீறல்: கோபால்சாமி வேதனை |
| சென்னை (ஏஜென்சி), 7 ஜனவரி 2009 ( 09:38 IST ) | |
திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்.
இசை விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி நேற்று சென்னை வந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
கேள்வி: திருமங்கலம் இடைத் தேர்தல் நிலவரம் எப்படி உள்ளது?
பதில்: திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தல் எப்படி நடக்கிறது என்பதை நீங்கள் (பத்திரிகையாளர்கள்) தான் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே.
கேள்வி: விதிமுறை மீறல் தொடர்பாக அமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது புகார் செய்யப்பட்டும், இன்னும் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லையே?
பதில்: வரட்டும். அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.
கேள்வி: திருமங்கலம் இடைத் தேர்தல் அமைதியாக நடைபெறுமா? அதற்கு தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
பதில்: திருமங்கலத்தில் என்ன நடக்கிறது என்று நீங்கள் தான் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். தற்போது தமிழகம் அடிமட்டத்தில் இருந்து முதலாவதாக உள்ளது.
தேர்தல் விதி மீறல்கள் என்றால் முன்பெல்லாம் பீகாரைப் பற்றித் தான் பேசுவோம். இப்போது தமிழகத்தைப் பற்றியே பேசுகிறோம்.
இவ்வாறு கோபால்சாமி தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - இலங்கையில் தமிழர்களுக்கு ஆதரவான நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தனியார் வானொலி, தொலைக்காட்சி நிலையங்களை ஆயுதமேந்திய கும்பல் தாக்கிச் சேதப்படுத்தியது... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|