|
| சென்னையில் லஷ்கர்- இ- தொய்பா ஊடுருவல்? |
| சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 7 ஜனவரி 2009 ( 09:17 IST ) | |
வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டை சீர்குலைக்கும் நோக்கத்துடன் லஷ்கர்- இ- தொய்பா பயங்கரவாதிகள் சென்னையில் ஊடுருவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில், இன்று தொடங்கி வரும் 9 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு 'வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் மாநாடு' நடைபெறுகிறது.
குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் க்ட்சித் தலைவர் சோனியா காந்தி, பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் உட்பட பல முக்கியப் பிரமுகர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
இந்த மாநாட்டை சீர் குலைக்கும் நோக்கத்துடன், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்- இ- தொய்பா, ஜமா உத் தாவா, ஜெய்-ஷி முகமத் உள்ளிட்ட சில பயங்கரவாத அமைப்புகளின் தற்கொலைப் படைப் பிரிவினர் 10 பேர் சென்னை நகருக்குள் ஊடுருவியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக காரைக்காலில் இருந்து சென்னை எழும்பூரில் உள்ள விமான நிறுவனத்திற்கு தகவல் வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வெளிநாடு வாழ் இந்தியர்களின் மாநாட்டில் நாசவேலைகள் புரியும் எண்ணத்துடன் கார் குண்டு தாக்குதல் நடத்த தற்கொலைப்படை பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
மிரட்டல் தகவலை அடுத்து மாநாடு நடைபெறும் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பாதுகாப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநாட்டுப் பிரதிநிதிகள் தங்கியுள்ள சென்னை நட்சத்திர ஹோட்டல்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் சென்னைக்கு வரும் நேரத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - இலங்கையில் தமிழர்களுக்கு ஆதரவான நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தனியார் வானொலி, தொலைக்காட்சி நிலையங்களை ஆயுதமேந்திய கும்பல் தாக்கிச் சேதப்படுத்தியது... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|