|
| திமுக மீது நடவடிக்கை: சு.சாமி கோரிக்கை |
| சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 6 ஜனவரி 2009 ( 18:06 IST ) | |
திருமங்கலம் இடைத்தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபடும் திமுகவினர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.இதன் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக அமைச்சர் ராஜா மீது வழக்கு தொடர அனுமதி கோரி பிரதமருக்கு கடிதம் எழுதினேன்.ஆனால், இதுவரை பதில் கிடைக்கவில்லை. அடுத்தமாதம் 15ஆம் தேதிக்குள் பதில் கிடைக்காவிட்டால் நீதிமன்றத்தை அணுகுவேன். லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - இலங்கையில் தமிழர்களுக்கு ஆதரவான நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தனியார் வானொலி, தொலைக்காட்சி நிலையங்களை ஆயுதமேந்திய கும்பல் தாக்கிச் சேதப்படுத்தியது... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|