|
| சென்னை புத்தக கண்காட்சி: ஜன.8 ல் துவக்கம் |
| சென்னை (ஏஜென்சி), 6 ஜனவரி 2009 ( 18:06 IST ) | |
சென்னை புத்தகக் கண்காட்சி வரும் 8ஆம் தேதி தொடங்குகிறது. இதில் ஒரு கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனைக்கு வருகின்றன.
இதுகுறித்து சென்னை தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்க தலைவர் சாந்தி கண்ணதாசன், செயலர் ஆர்.எஸ்.சண்முகம் ஆகியோர் கூறியதாவது:
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட்ஜார்ஜ் ஆங்கிலோ பள்ளி மைதானத்தில் 32ஆவது புத்தக கண்காட்சி வரும் 8ஆம் தேதியில் இருந்து 18ஆம் தேதி வரை நடக்கிறது. இதில், 1 லட்சத்து 75 ஆயிரம் சதுர அடி பரப்பில் 588 அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
இந்த கண்காட்சியில் 512 நிறுவனங்கள் புத்தகங்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றன. சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் கண்காட்சியில் இடம் பெறவுள்ளது.
புத்தக கண்காட்சியை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் தொடங்கி வைக்கிறார். இக்கண்காட்சிக்கு இந்த ஆண்டு சுமார் 10 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - இலங்கையில் தமிழர்களுக்கு ஆதரவான நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தனியார் வானொலி, தொலைக்காட்சி நிலையங்களை ஆயுதமேந்திய கும்பல் தாக்கிச் சேதப்படுத்தியது... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|