யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு
திருச்சி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 6 ஜனவரி 2009   ( 16:40 IST )
வைகுண்ட ஏகாதசியை ஒட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உட்பட வைணவ ஆலயங்களில் நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது.

ஸ்ரீரங்கம் கோயிலில் நாளை அதிகாலை 4 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து ரங்கநாதர் புறப்பாடு நடக்கிறது. இதைத் தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க காலை 5 மணிக்கு 'சொர்க்க வாசல்' எனப்படும் பரமபத வாசல் வழியாக பக்தர்களுக்கு எம்பெருமான் காட்சியளிக்கிறார்.

வைகுண்ட ஏகாதசியையொட்டி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். பக்தர்களின் வசதிக்காக அதிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும்.

பக்தர்கள் என்ற போர்வையில் பயங்கரவாதிகள் ஊடுருவலாம் என்பதால், ஸ்ரீரங்கம் கோயிலில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஏகாதசி விழாவையொட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் இன்றும், நாளை ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் ஸ்ரீரங்கத்துக்கு சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

இதேபோல் தமிழகத்தில் உள்ள பல்வேறு வைணவ ஆலயங்களிலும் நாளை வைகுண்ட ஏகாதசி விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
8-ல் ஜனாதிபதி, பிரதமர் தமிழகம் வருகை
பேருந்துகளில் காய்கறி ஏற்ற அனுமதி: நேரு
ஜன 21-ல் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை: ஸ்டாலின் விளக்கம்
திருமங்கலத்தில் நாளை பிரச்சாரம் ஓய்வு
வா‌க்குப்பதிவு மெஷினில் மோசடி இல்லை: தேர்தல் ஆணைய‌ம்
செய்திகள்
தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...