யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
8-ல் ஜனாதிபதி, பிரதமர் தமிழகம் வருகை
சென்னை (ஏஜென்சி), 6 ஜனவரி 2009   ( 16:24 IST )
வெளிநாடு வாழ் இந்தியர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் நாளை மறுநாள் சென்னை வருகின்றனர்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நாளை தொடங்கி வரும் 9 ஆம் தேதி வரை 'வெளிநாடு வாழ் இந்தியர்களின் (என்.ஆர்.ஐ.) மாநாடு' நடைபெறுகிறது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரங்களுக்கான அமைச்சகத்துடன், தமிழக அரசும் இந்திய தொழில் கூட்டமைப்பும் இணைந்து நடத்தும் இம்மாநாட்டில், 40 நாடுகளைச் சேர்ந்த 1500 பேர் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது.

இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் வரும் 8ஆம் தேதி சென்னை வருகிறார். மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கலந்து கொள்கிறார்.

இதுதவிர, தமிழக முதல்வர் கருணாநிதி, குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, கேரள முதல்வர் அச்சுதானந்தன் உட்பட பல்வேறு மாநில முதல்வர்கள், முக்கிய அதிகாரிகள், பிரபலங்கள் ஆகியோர் இம்மாநாட்டில் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது.

இந்த மாநாட்டுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இப்பணியில் சுமார் 3,600 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பேருந்துகளில் காய்கறி ஏற்ற அனுமதி: நேரு
ஜன 21-ல் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை: ஸ்டாலின் விளக்கம்
திருமங்கலத்தில் நாளை பிரச்சாரம் ஓய்வு
வா‌க்குப்பதிவு மெஷினில் மோசடி இல்லை: தேர்தல் ஆணைய‌ம்
திருமங்கலத்தில் வெற்றி உறுதி: கருணாநிதி
செய்திகள்
தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...