|
| வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை: ஸ்டாலின் விளக்கம் |
| மதுரை (ஏஜென்சி), 6 ஜனவரி 2009 ( 11:37 IST ) | |
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாற்றை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுத்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது அதிமுக சார்பில் தேர்தல் ஆணைத்தில் புகார் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதாகவும் தெகிறது.
இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின்போது நான் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை என்று ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "எந்த வாக்காளர்களுக்கும் நான் பணம் கொடுக்கவில்லை" என்றார்.
'தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்கும்படி சிலர் வலியுறுத்தினர். அந்த குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு மட்டுமே கொடுத்தேன். அதைத்தான் வாக்காளர்களுக்கு நான் பணம் கொடுத்ததாக திரித்து சொல்கின்றனர்" என்று விளக்கினார்.
குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு தான் கொடுத்தேன் என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. தேவைப்படும் போது, அந்த ஆதாரத்தை காட்டுவேன் என்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|