|
| திருமங்கலத்தில் நாளை பிரச்சாரம் ஓய்வு |
| திருமங்கலம் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 6 ஜனவரி 2009 ( 11:34 IST ) | |
இடைத் தேர்தல் நடைபெறும் திருமங்கலம் தொகுதியில் நாளை மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. இதையொட்டி தற்போது அங்கு பிரச்சாரம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தல் வரும் 9 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் டிசம்பர் 15 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை நடைபெற்றது.
கடந்த 26 ஆம் தேதி இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி திமுக சார்பில் லதா அதியமான், அதிமுக சார்பில் முத்து ராமலிங்கம், தேமுதிக சார்பில் தனபாண்டியன், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பத்மநாபன் உட்பட மொத்தம் 36 பேர் களத்தில் உள்ளனர்.
வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியானதும் திருமங்கலம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் சுறுசுறுப்படைந்தது. திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர்கள் தொகுதியில் முகாமிட்டு தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினர்.
கடந்த 28 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக- அதிமுகவினர் இடையே மோதல் உண்டானது. இது தொடர்பாக மேலூர் அதிமுக எம்எல்ஏ சாமி உட்பட 52 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
வாக்காளர்களைக் கவருவதற்காக பரிசுகளை அளித்து வருவதாக, திமுக- அதிமுக கட்சிகள் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை தெரிவித்தன. தேர்தல் களத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலாலிதா வந்ததும் பிரச்சாரம் சூடு பிடித்தது.
நேற்று மாலை முதல்வர் கருணாநிதியும் திமுக வேட்பாளரை ஆதரித்து திருமங்கலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். பல்வேறு கட்சி வேட்பாளர்களு வீடுவீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
தற்போதைய அனல் பறக்கும் பிரச்சாரம் நாளை மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. இதனால் தற்போது பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
வரும் 9 ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 12 ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்று பிற்பகலுக்குள் முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|