|
| திருமங்கலத்தில் வெற்றி உறுதி: கருணாநிதி |
| திருமங்கலம் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 6 ஜனவரி 2009 ( 09:29 IST ) | |
திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் லதா அதியமானை ஆதரித்து, முதல்வர் கருணாநிதி நேற்று தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
திருமங்கலம் தொகுதி எனக்கு பழக்கப்பட்ட தொகுதியாகும். இங்கு போட்டியிட்ட என்.எஸ்.வி. சித்தனை ஆதரித்து தவறாமல் பிரச்சாரம் செய்துள்ளேன். பல தியாகிகளை இந்த தொகுதி உருவாக்கியுள்ளது.
கடந்த தேர்தலில் இங்கு வெற்றி பெற்ற மதிமுகவின் வீர.இளவரசன் இடத்தில், தற்போது மதிமுக போட்டியிடவில்லை. இதெல்லாம் ஒரு தியாகம். எப்படியும் தோற்கப் போகிறோம். யார் தோற்றால் என்ன என்பதற்காக ஜெயலலிதாவுக்காக விட்டுக் கொடுத்துள்ளார் வைகோ.
இலவச நிலம், வீட்டுமனை பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கட்சியினர் இன்று கூட போராட்டம் நடத்தி, 10 ஆயிரம் பேர் கைதாயினர். திமுக ஆட்சிக்கு வந்தது முதல் 6 லட்சத்து 48 ஆயிரத்து 571 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இது தெரியாமல் போராட்டம் செய்துள்ளனர்.
இடதுசாரி நண்பர்களை நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. ஜெயலலிதாவுடன் சேர்ந்து அவர்களும் கெட்டு விட்டனர்.
வாக்குகளை போட்டால் திமுகவிற்கே விழும் வகையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை வடிவமைத்துள்ளதாக ஜெயலலிதாவும், வைகோவும் பேசியுள்ளார். தேர்தல் முடிவு அவர்களுக்கு தெரிந்து விட்டது என நினைக்கிறேன்.
ஜெயலலிதா ஆட்சியில் நடந்த இடைத் தேர்தல்களில் மின்னணு இயந்திரங்களில் மோசடி செய்து தான் வெற்றி பெற்றாரா? கேவலமாகவும், அறியாமையிலும் இப்படி பேசுகின்றனர்.
அவர்கள் இப்படிச் சொல்வதற்கு காரணமுண்டு. 9ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அவர்களுக்கு தெரிந்துவிட்டது. அந்த பயத்தில், தப்பித்துக் கொள்வதற்காக இப்படி சொல்கிறார்கள்.
திருமங்கலம் தேர்தலில் திமுக வெற்றி பெறுவது நிச்சயம். ஸ்டாலின், அழகிரி உள்ளிட்டோரும், திமுகவினரும், கூட்டணி கட்சியினரும் தேர்தலில் பணியாற்றி வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|