யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
வாக்காளர்களுக்கு பணம்: ஸ்டாலின் மீது வழக்கு
திருமங்கலம்/ புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 6 ஜனவரி 2009   ( 08:58 IST )
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கிரிமினல் வழக்கு தொடர தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வரும் 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் திருமங்கலம் தொகுதியில், வாக்காளர்களைக் கவருவதற்காக திமுக, அதிமுக கட்சிகள் இலவசப் பரிசுப் பொருட்களை வாரி வழங்கி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்காளர்களுக்கு அமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஆ. ராசா ஆகியோர் பணம் கொடுப்பது போன்ற காட்சி 2 நிமிட வீடியோ காட்சி தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.

இதன் அடிப்படையில் டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் ஸ்டாலினுக்கு எதிராக அதிமுக கூட்டணிக் கட்சிகள் புகார் அளித்தன.

இதையடுத்து, வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டின் கீழ் அமைச்சர் ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்ய தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதே குற்றச்சாட்டின் பேரில் அதிமுகவைச் சேர்ந்த கோவை தண்டபாணி என்பவர் மீதும், திமுக கொடுத்த புகாரின் அடிப்படையில் கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இது தொடர்பாக விளக்கம் கேட்டு திமுக, அதிமுக கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருப்பதாக, ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
‌கச்சத் தீவு: மத்திய அரசுக்கு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் நோட்டீஸ்
மத்திய அரசிலிருந்து விலகலா? ராமதாஸ் பதில்
நாமக்கல்லில் 2 கோடி முட்டை தேக்கம்
முன்னாள் துணை சபாநாயகர் மரணம்
திண்டுக்கல்: சாலை விபத்தில் 8 பேர் பலி
திமுக வெற்றி‌க்கு பாடுபடுவோம்: திருமா
செய்திகள்
தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...