யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
மத்திய அரசிலிருந்து விலகலா? ராமதாஸ் பதில்
சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 5 ஜனவரி 2009   ( 15:56 IST )
இலங்கை பிரச்னை தொடர்பாக மத்திய அரசில் இருந்து விலகுவது குறித்து வரும் பிப்ரவரி மாதம் முடிவு செய்யப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலவர் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் டெல்லியில் பிரதமரை சந்தித்தும் கோரிக்கை வைத்தோம்.

ஆனால் இதுவரை மத்திய அரசு எவ்விதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதன் மூலம் தமிழர்களை மத்திய அரசு அவமானப்படுத்திவிட்டது. 7 கோடி தமிழ் மக்களும் சுய மரியாதை, தன்மானத்தை இழந்து வெட்கித் தலைகுனித்து நிற்கிறார்கள்.

இலங்கை விவகாரம் மற்றும் மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நீடிப்பது தொடர்பாக வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் பொதுக்குழுவில் வாக்கெடுப்பு நடத்தி, இறுதி முடிவெடுக்கப்படும்.

இலங்கை தமிழர்களுக்காக தனித்தனியாக குரல் எழுப்புவதைக் காட்டிலும் முதல்வர் கருணாநிதி தலைமையில் ஒருமித்து, கூட்டாக முடிவெடுக்க வேண்டும் என்பதை பலமுறை வலியுறுத்தியுள்ளேன்.

இலங்கை பிரச்னை தொடர்பாக முதல்வர் கருணாநிதி என்ன முடிவெடுக்கிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நாமக்கல்லில் 2 கோடி முட்டை தேக்கம்
முன்னாள் துணை சபாநாயகர் மரணம்
திண்டுக்கல்: சாலை விபத்தில் 8 பேர் பலி
திமுக வெற்றி‌க்கு பாடுபடுவோம்: திருமா
டிராபிக் ராமசாமி மீது தாக்குதல்
இலங்கையில் போராட்டம் தொடரும்: ராமதாஸ்
செய்திகள்
தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...