|
| முன்னாள் துணை சபாநாயகர் மரணம் |
| சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 5 ஜனவரி 2009 ( 13:34 IST ) | |
தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் துணை சபாநாயகர் பி. சீனிவாசன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 71.
கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சீனிவாசன், ஜனவரி 3ஆம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சை அவர் மாற்றப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சீனிவாசனின் உயிர் இன்று காலை பிரிந்ததாக, அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். காலஞ்சென்ற சீனிவாசனுக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
கடந்த 1967 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் காமராஜரை வீழ்த்தியவர் சீனிவாசன்.
கடந்த 1971 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகராகப் பதவி வகித்தார். மீண்டும், 1989 ஆம் ஆண்டு தேர்தலில் சிவகாசி தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் அதிமுகவில் சேர்ந்த சீனிவாசன், 'நமது எம்.ஜி.ஆர்.' பத்திரிக்கையில் தொடர்ந்து பல்வேறு கட்டுரைகளை எழுதி வந்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|