யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
திண்டுக்கல்: சாலை விபத்தில் 8 பேர் பலி
திண்டுக்கல் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 5 ஜனவரி 2009   ( 12:44 IST )
திண்டுக்கல் அருகே வேனும் அரசுப் பேருந்தும் நேருக்குநேர் மோதிக் கொண்ட பயங்கர விபத்தில் ஐயப்ப பக்தர்கள் 8 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த பத்மநாபன் (34), அரிமுத்து (22), பாலமுருகன் (19), முரளி (20), மாரிமுத்து (22), சரவணன்(19) உட்பட 15 பேர் வேன் மூலம் சபரிமலைக்குப் புறப்பட்டனர்.

இவர்களது வேன், திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அடுத்துள்ள வீரசிக்கம்பட்டி அருகே இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது.அப்போது கம்பத்தில் இருந்து வந்து கொண்டிருந்த அரசு பேருந்து மீது வேன் மோதியது.

இதில் வேனின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.வேனில் பயணம் செய்த பத்மநாபன், அரிமுத்து, பாலமுருகன், முரளி, மாரிமுத்து, சரவணன் ஆ‌கியோ‌ர் உடல் நசுங்கி ‌சம்பவ இட‌த்‌திலேயே இறந்தனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வேன் ஓ‌ட்டுன‌ர் உட்பட இருவர் உ‌யி‌ரிழ‌ந்தன‌ர்.பல‌த்த காய‌மடை‌ந்த 9 பே‌ர் திண்டுக்கல்லில் உள்ள அரசு, தனியார் மரு‌த்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து காவ‌ல்துறை‌யின‌ர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
திமுக வெற்றி‌க்கு பாடுபடுவோம்: திருமா
டிராபிக் ராமசாமி மீது தாக்குதல்
இலங்கையில் போராட்டம் தொடரும்: ராமதாஸ்
திருமங்கலத்துக்கு துணை ராணுவப்படை வருகை
நரேஷ் குப்தா நேர்மையானவர்: ஜெ.
திருமங்கலத்தில் கருணாநிதி இன்று பிரச்சாரம்
செய்திகள்
தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...