யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
டிராபிக் ராமசாமி மீது தாக்குதல்
சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 5 ஜனவரி 2009   ( 12:28 IST )
சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீடு புகுந்து தாக்கினர்.

சென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி, பல்வேறு பொதுப் பிரச்னைகள் தொடர்பாக வழக்கு தொடர்ந்து, சிக்கல்களுக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு பெற்று வந்தார்.

சென்னை நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், பிரம்மாண்ட விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டது உள்ளிட்டவைகளுக்கு டிராபிக் ராமசாமி தொடர்ந்த பொதுநல வழக்குகளே காரணமாக இருந்தன.

இதனால் சில தரப்பினரின் விரோதத்திற்கு அவர் ஆளானர். அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்றிரவு டிராபிக் ராமசாமியை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீடு புகுந்து தாக்கினர். மேலும் அவரது வீட்டையும் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. காவல்துறையினர் இல்லாத நேரம் பார்த்து இத்தாக்குதல் நடந்துள்ளது.

சென்னை மண்ணடியில் இரும்பு ஏற்றிக் கொண்டு வரும் லாரிகளுக்கு எதிராக டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்து, தடையுத்தரவு பெற்றார். இதைக் கண்டித்து நேற்று முன்தினம் இரும்பு வியாபாரிகள் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர்.

இந்த தடையுத்தரவால் அதிருப்தியடைந்த சிலர் டிராபிக் ராமசாமி மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக கோடம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இலங்கையில் போராட்டம் தொடரும்: ராமதாஸ்
திருமங்கலத்துக்கு துணை ராணுவப்படை வருகை
நரேஷ் குப்தா நேர்மையானவர்: ஜெ.
திருமங்கலத்தில் கருணாநிதி இன்று பிரச்சாரம்
இன்டர்நெட்டில் மின் கட்டணம்: 2 வங்கியில் அறிமுகம்
நெல்லை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தற்கொலை
செய்திகள்
தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...