|
| இலங்கையில் போராட்டம் தொடரும்: ராமதாஸ் |
| திண்டுக்கல் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 5 ஜனவரி 2009 ( 11:43 IST ) | |
'இலங்கையில் சிங்களர்களுக்கு உள்ள உரிமைகளை தமிழர்களும் பெறும்வரை அங்கு போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்' என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் திண்டுக்கலில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சீனா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இலங்கை ராணுவத்துக்கு தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வருகிறது. இதன் மூலம் இலங்கை ராணுவம், புலிகள் மீது தாக்குதல் நடத்தி கிளிநொச்சியை பிடித்துள்ளது.
இந்த போரில் எத்தனை பேர் இறந்தனர்; எத்தனை பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டன; எத்தனை பேர் சரணடைந்தனர் என்பது போன்ற விவரங்களை இலங்கை ராணுவம் சர்வதேச சமூகத்திற்கு காட்டவில்லை.
இலங்கையில் சிங்களர்களுக்கு உள்ள உரிமைகளை தமிழர்களும் பெறும் வரை, அங்கு போராட்டம் தொடரும்.
இலங்கையில் போர் நிறுத்த செய்யும்படி மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முதல்வர் கருணாநிதி தலைமையில் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து வலியுறுத்தியும் மத்திய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - ஆட்களே இல்லாத கிளிநொச்சி நகரை இலங்கை ராணுவம் பிடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|