|
| திருமங்கலத்துக்கு துணை ராணுவப்படை வருகை |
| திருமங்கலம் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 5 ஜனவரி 2009 ( 11:31 IST ) | |
திருமங்கலம் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக, துணை ராணுவப் படை திருமங்கலம் வந்துள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தல் வரும் 9ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, சமீபத்தில் திமுக மற்றும் அதிமுகவினடையே மோதல் ஏற்பட்டது.
இதுகுறித்து இரு தரப்பிலும் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, திருமங்கலம் தேர்தல் பாதுகாப்புக்காக துணை ராணுவப்படை வரவழைக்கப்படும் என்று நரேஷ்குப்தா உறுதியளித்தார்.
அதன்படி, கேரளா மற்றும் நெய்வேலியில் இருந்து 280 வீரர்கள் அடங்கிய நான்கு கம்பெனி துணை ராணுவப்படையினர் திருமங்கலம் வந்துள்ளனர். இவர்கள், திருமங்கலம் தொகுதியில் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
தமிழக போலீசார் சுமார் 3 ஆயிரம் பேர், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர, மேலும் நான்கு கம்பெனி துணை ராணுவப் படையினர் திருமங்கலம் வரவுள்ளதாகவும் தெரிகிறது.
திருமங்கலம் தொகுதியில் 65 கிராமங்கள் பதற்றந்த பகுதியாகவும், 33 கிராமங்கள் மிகவும் பதற்றம் நிறைந்ததாக பகுதியாகவும் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - ஆட்களே இல்லாத கிளிநொச்சி நகரை இலங்கை ராணுவம் பிடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|