யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
நரேஷ் குப்தா நேர்மையானவர்: ஜெ.
மதுரை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 5 ஜனவரி 2009   ( 10:34 IST )
தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா நேர்மையான முறையில் செயல்பட்டு வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் முத்து ராமலிங்கத்தை ஆதரித்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள ஜெயலலிதா, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

திருமங்கலம் தொகுதியில் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நோக்கத்துடன் திமுகவினர் முறைகேடுகளை செய்து வருகின்றன. இது தொடர்பாக அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள அமைச்சர்கள் ஸ்டாலின், ஆ. ராஜா ஆகியோர் வாக்காளர்களுக்கு பணம், இலவச வேட்டி- சேலை ஆகியவற்றை அளித்து வருகின்றனர். இது வீடியோவிலும் பதிவாகியுள்ளது. இதை தேர்தல் ஆணையத்திடம் அளிப்போம்.

வாக்காளர்களுக்கு திமுக விருந்து அளித்து, இலைக்கு அடியில் ரூ. 4,000 வைப்பதாகத் தெரிகிறது. ஒரு ஓட்டுக்கு திமுகவினர் ரூ. 6,000 வரை செலவு செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா மீது திமுகவின் புகார் அளித்துள்ளனர். நரேஷ் குப்தா நேர்மையாகவே செயல்பட்டு வருகிறார். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
திருமங்கலத்தில் கருணாநிதி இன்று பிரச்சாரம்
இன்டர்நெட்டில் மின் கட்டணம்: 2 வங்கியில் அறிமுகம்
நெல்லை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தற்கொலை
இலங்கை: பிரதமருக்கு ராமதாஸ் கடிதம்
இந்திய அரசு பச்சைத் துரோகம் : திருமாவளவன் கண்டனம்
திருமங்கலம்: இன்று முதல் ஜெ. பிரசாரம்
செய்திகள்
சர்வதேசம் - ஆட்களே இல்லாத கிளிநொச்சி நகரை இலங்கை ராணுவம் பிடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...