யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
திருமங்கலத்தில் கருணாநிதி இன்று பிரச்சாரம்
மதுரை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 5 ஜனவரி 2009   ( 09:51 IST )
திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் கருணாநிதி இன்று பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். அவரது வருகையைத் தொடர்ந்து அங்கு பிரச்சாரம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தேவர் சிலை அருகே இன்று மாலை நடைபெறும் திமுக கூட்டணி தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்திற்கு, தேர்தல் பணிக்குழுத் தலைவர் மு.க. அழகிரி முன்னிலை வகிக்கிறார்.

இக்கூட்டத்தில், திமுக வேட்பாளர் லதா அதியமானை ஆதரித்து முதல்வர் கருணாநிதி சிறப்புரையாற்றுகிறார். அமைச்சர்கள் அன்பழகன், மு.க. ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் உரையாற்றுகின்றனர்.

இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் கருணாநிதி இன்று பிற்பகல் விமானம் மூலம் மதுரை செல்கிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் திருமங்கலம் செல்கிறார்.

வரும் 9 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் திருமங்கலம் தொகுதியில் ஏற்கனவே அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மதுமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்வர் கருணாநிதியின் வருகையைத் தொடர்ந்து அங்கு தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இன்டர்நெட்டில் மின் கட்டணம்: 2 வங்கியில் அறிமுகம்
நெல்லை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தற்கொலை
இலங்கை: பிரதமருக்கு ராமதாஸ் கடிதம்
இந்திய அரசு பச்சைத் துரோகம் : திருமாவளவன் கண்டனம்
திருமங்கலம்: இன்று முதல் ஜெ. பிரசாரம்
திருமங்கலம்: 5ம் தேதி கருணாநிதி பிரச்சாரம்
செய்திகள்
சர்வதேசம் - ஆட்களே இல்லாத கிளிநொச்சி நகரை இலங்கை ராணுவம் பிடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...