|
| இன்டர்நெட்டில் மின் கட்டணம்: 2 வங்கியில் அறிமுகம் |
| சென்னை (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 4 ஜனவரி 2009 ( 16:31 IST ) | |
சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, ஆன்-லைனில் மின் கட்டணம் கட்டும் வசதி ஐசிஐசிஐ, இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியை சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், குறைந்த மின் அழுத்த இணைப்பு பயன்படுத்துவோர் கடைசி நாளில் தான் பணம் செலுத்தச் செல்கின்றனர். இதனால் கூட்டம் அதிகமாகி நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதைக் கருத்தில் கொண்டு கடந்த 1.4.08 முதல் 24 மணி நேரமும் பணம் செலுத்தும் வகையில் கனரா வங்கி உதவியுடன் சென்னையில் எந்த நேரமும் பணம் கட்டும் வசதியை அறிமுகப்படுத்தியதாகவும், தற்போது இந்த சேவையில் ஐசிஐசிஐ, இந்தியன் வங்கிகளும் பங்கு கொண்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
தற்போது கும்மிடிப்பூண்டி முதல் மரக்காணம் வரை பயனடையும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம், விரைவில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றார் அமைச்சர் ஆற்காடு வீராசாமி.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - ஆட்களே இல்லாத கிளிநொச்சி நகரை இலங்கை ராணுவம் பிடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|