யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
நெல்லை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தற்கொலை
திருநெல்வேலி (ஏஜென்சி), 4 ஜனவரி 2009   ( 12:45 IST )
திருநெல்வேலியில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை பாளையங்ககோட்டை சிவன்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் ஆசாரி. இவருக்கு சாந்தா, ரேவதி என்ற இரு மனைவிகள். முருகன், வெங்கடேஷ் என்ற இரு மகன்கள், மகேஸ்வரி என்ற மகள். இதில் ரேவதிக்கு பழனி, சிவா என்ற 2 மகன்கள், ஐயப்பா, செல்வி என்ற மகள்கள்.

இந்நிலையில் கோபாலின் வீடு நேற்று காலை நீண்டநேரம் திறக்கப்படாமல் இருந்தது. சந்தேகத்தின் பேரில் உள்ளே சென்று பார்த்ததில் ஒரே அறையில் கோபால், சாந்தா, ரேவதி, பழனி, வெங்கடேஷ், சிவா ஆகிய 6 பேரும் இறந்த நிலையில் கிடந்தனர்.

இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து 6 பேரின் உடல்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

கடன் தொல்லையால் கோபால் குடும்பம் கஷ்டப்பட்டு வந்ததாகவும், இதனால் மனமுடைந்து காபியில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்டதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இலங்கை: பிரதமருக்கு ராமதாஸ் கடிதம்
இந்திய அரசு பச்சைத் துரோகம் : திருமாவளவன் கண்டனம்
திருமங்கலம்: இன்று முதல் ஜெ. பிரசாரம்
திருமங்கலம்: 5ம் தேதி கருணாநிதி பிரச்சாரம்
போராட்ட முடிவு: தற்காலிக பணியாளர்களுக்கு எச்சரிக்கை
கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: அமை‌ச்சரவை ஒ‌ப்புத‌ல்
செய்திகள்
சர்வதேசம் - ஆட்களே இல்லாத கிளிநொச்சி நகரை இலங்கை ராணுவம் பிடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...