|
| இலங்கை: பிரதமருக்கு ராமதாஸ் கடிதம் |
| சென்னை (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 4 ஜனவரி 2009 ( 12:28 IST ) | |
இலங்கை பிரச்னையில் மத்திய அரசின் உணர்ச்சியற்ற அணுகுமுறைக்கு காலம் கடப்பதற்குள் விடை தெரிய வேண்டும் என்று, பிரதமர் மன்மோகன் சிங்கை பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதிய கடித்தத்தில் கூறியிருப்பதாவது:
இலங்கை பிரச்னை தொடர்பாக டிசம்பர் 4ஆம் தேதி முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் உங்களை நேரில் சந்தித்துப் பேசினோம்.
ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இலங்கை பிரச்னைக்கு அமைதி வழியில் அரசியல் தீர்வு காண வேண்டும் என்று தாங்கள் கூறியதை இங்கு நினைவு கூர்கிறேன்.
இலங்கை பிரச்னை தொடர்பாக டெல்லியின் உணர்ச்சியற்ற, அக்கரையற்ற அணுகுமுறையைத் தான் இது காட்டுகிறது. டெல்லி அதிகாரிகளுக்கு தமிழர்களைவிட இலங்கை அரசு தான் முக்கியமாகப்பட்டுள்ளது.
தமிழர்களின் கவுரவம், சுய மரியாதை குறித்து டெல்லி அதிகாரிகளுக்கு அக்கரை இல்லையா? இதையே இறுதி பதிலாக எடுத்துக் கொள்ளலாமா? காலம் கடப்பதற்கு முன் எங்களுக்கு விடை தேவை.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - ஆட்களே இல்லாத கிளிநொச்சி நகரை இலங்கை ராணுவம் பிடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|