அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று முதல் திருமங்கலத்தில் தேர்தல் பிரச்சாரம் தொடங்குகிறார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வரும் 9ம் தேதி நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கத்தை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று முதல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
முதல் நாளான இன்று பெருங்குடி, கைத்தறி நகர், நிலையூர், சம்பகுளம், வளையங்குளம், எலியார்பத்தி, பாரபத்தி, கூடக்கோவில், சின்ன உலகாணி, பெரிய உலகாணி, மைக்குடி, கீழக்கோட்டை, நடுக்கோட்டை, மேலக்கோட்டை, சிவரக்கோட்டை, கரிசல்காலாம்பட்டி, சுவாமி மல்லம்பட்டி, செங்கப்படை, கட்ராம்பட்டி, ஆலம்பட்டி ஆகிய இடங்களில் தீவிர வாக்கு சேகரிக்கிறார்.
நாளை (4ஆம் தேதி) புளியங்குளம், செக்காணூரணி, சிக்கம்பட்டி, அனுப்பப்பட்டி காலனி, கரடிக்கல், கீழ உரப்பனூர், பள்ளக்காபட்டி, மேல உரப்பனூர், சித்தாலை, புங்கங்குளம், அழகுச்சிறை, வாகைக்குளம், சின்ன வாகைக்குளம், காண்டை, உசிலம்பட்டி மெயின்ரோடு, பண்ணிக்குண்டு, சாத்தங்குடி, கண்டுகுளம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.
5ஆம் தேதி கூத்தியார்குண்டு, சிவரக்கோட்டை, அகத்தாப்பட்டி, லாலாபுரம், வில்லூர், கள்ளிக்குடி, கே.வெள்ளாகுளம், விருதுநகர் மெயின்ரோடு, மேலப்பட்டி, சென்னம்பட்டி, குராயூர், நொச்சிக்குளம், மருதக்குடி, வேப்பங்குளம், இலுப்பங்குளம் போன்ற இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
6ஆம் தேதி திருமங்கலம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை அருகே நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.
|