யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
போராட்ட முடிவு: தற்காலிக பணியாளர்களுக்கு எச்சரிக்கை
சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 3 ஜனவரி 2009   ( 12:00 IST )
'தற்காலிக பணியாளர்கள் போராட்டம் நடத்த முயன்றால், அவர்களைக் காப்பாற்ற அரசு எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்' என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2006ல் மீண்டும் திமுக அரசு மலர்ந்ததும், தற்காலிகப் பணியாளர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை உருவாக்கும் குறிக்கோளுடன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலம் உரிய தேர்வு நடத்தி, விதிப்படி முறையாக நியமிக்க முடிவு செய்து ஆணையிடப்பட்டது.

இந்த அரசாணைக்கு எதிராக தற்காலிகப் பணியாளர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அவர்களது வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், அரசு எடுத்த முடிவுப்படி முறையாக பணி நியமிக்க உத்தரவிட்டது.

இதன்படி, டிஎன்பிஎஸ்சி சிறப்புத் தேர்வு நடத்தியது. அதில், 4,103 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு முறையான பணி நியமனம் வழங்கக்கூடாது என்று உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தற்காலிகப் பணியாளர்கள் மீண்டும் வழக்கு தொடுத்து, தடை உத்தரவு பெற்றனர்.

இதற்கிடையே, டிஎன்பிஎஸ்சி ஏற்கனவே தேர்வு செய்த 4,103 பேருடன், தொடர்ந்து ஏற்பட்ட காலியிடங்களை தற்காலிகப் பணியாளர்களைக் கொண்டே நிரப்ப முடிவு செய்தது. இதற்காக கூடுதலாக 1,510 பேரை தேர்வு செய்து பட்டியல் வழங்கும்படி தேர்வாணையத்தை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வு செய்தவர்கள் போக, எஞ்சியுள்ள தற்காலிகப் பணியாளர்களுக்கு படிப்படியாக அரசு அலுவலகங்களில் ஏற்படும் காலியிடங்களில் முறையாக நியமிக்கவும், அதுவரை அவர்கள் அரசுப் பணியில் தொகுப்பூதியத்தில் தொடரலாம் என்றும் கருணை அடிப்படையில் அரசு முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில், சில தற்காலிகப் பணியாளர்கள், சில அரசியல்வாதிகளின் தூண்டுதலால் போராட்ட முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டால், அவர்கள் மீது இரக்கம் கொண்டு, வாழ்வாதாரத்தைக் காப்பாற்றும் நோக்கத்தோடு, அரசு எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: அமை‌ச்சரவை ஒ‌ப்புத‌ல்
‌பிரதம‌ருக்கு கருப்புக்கொடி காட்டுவோம்: பழ.நெடுமாற‌ன்
திருமங்கலம்: ஜெ. பிரச்சாரம் நாளை துவக்கம்!
திமுக புகார் குறித்து விளக்கம் அளிப்பேன்: நரேஷ்குப்தா
இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: பாமக
எம்.ஜி.ஆர் அண்ணன் மகன் சுகுமார் மரணம்
செய்திகள்
தமிழகம் - 'முதல்வர் கருணாநிதியின் விருப்பப்படி கூவம் நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்' என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...