யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
கூவம் நதி சுத்தமாகும் : ஸ்டாலின் உறுதி
சென்னை (ஏஜென்சி), 30 டிசம்பர் 2008   ( 10:51 IST )
'முதல்வர் கருணாநிதியின் விருப்பப்படி கூவம் நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்' என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

சென்னை தி.நகர் ஜி.என்.ஷெட்டி சாலை - திருமலை சாலை சந்திப்பில் அமைக்கப்பட்ட புதிய மேம்பாலத்தை நேற்று திறந்துவைத்து பேசிய முதல்வர் கருணாநிதி, 'கூவத்தை சுத்தப்படுத்தி, அதில் சிறுவர், சிறுமிகள் குளிப்பதை பார்க்க்க ஆசை' என்று கூறினார்.

இதன் பின்னர் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

கூவம் நதியை சுத்தப்படுத்த உலக வங்கியை நாடவுள்ளோம். கிருஷ்ணா நீர் கால்வாய் பணியை மேற்கொண்ட சத்ய சாய் அறக்கட்டளைக்கும் வேண்டுகோள் விடுப்போம்.

இதுகுறித்து நானும், அமைச்சர் துரைமுருகனும் நேரில் சென்று பேசுவோம்; கூவத்தை சுத்தப்படுத்தி தருவோம் என முதல்வருக்கு உறுதியளிக்கிறேன்.

கடந்த 1973ல் அண்ணா மேம்பாலத்தை கருணாநிதி திறந்து வைத்தார். அதன் பின்னர், 23 ஆண்டுகளுக்கு மேம்பாலங்களே கட்டப்படவில்லை. 1996ம் ஆண்டு சென்னையில் 14 மேம்பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டது.

அதன் முதல் கட்டமாக 10 மேம்பாலங்களை கட்டும் பணிகள் துவங்கின. குறித்த காலத்திற்கு முன்னரே 9 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டன. இதன் மூலம் ரூ.30 கோடி மிச்சப்படுத்தப்பட்டது. தொழில் நுட்பக் காரணங்களால் கட்ட முடியாத பெரம்பூர் பாலம் அடுத்த ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும்.

சென்னை மெரினா கடற்கரை, ரூ.17 லட்சம் செலவில் அழகுபடுத்தப்பட்டு வருகிறது. இந்த பூங்கா, தை புத்தாண்டில் தொடங்கி வைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கூவத்தில் நல்ல தண்ணீர் ஓடுவதை பார்க்க ஆசை: முதல்வர்
தேர்தல் வன்முறை: திருமங்கலம் தொகுதிக்கு கூடுதல் பாதுகாப்பு
‌வீ‌ட்டுமனை‌ ப‌ட்டா : மா‌ர்‌க்‌‌சி‌ஸ்‌ட்டுக்கு கருணா‌நி‌தி ப‌தி‌ல்
'2 நாள் விடுமுறை அளித்தால் தொழிற்சாலைகளுக்கு மின்வெட்டு ரத்து'
' இடைத்தேர்தல் : திரும‌ங்கல‌‌ம் தொகு‌தி‌க்கு ‌சீ‌ல் வை‌க்க‌ப்படு‌ம் '
புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் 29 பேர் காயம்
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புதிய முதல்வராக தனது மகன் உமர் அப்துல்லாவை தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா பரிந்துரை செய்துள்ளார்....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - இன்றைய நம் வாழ்க்கையில் ஏசி எனப்படும் குளிர்சாதனப் பெட்டி அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் முறையாகப் பயன்படுத்தாத ஏசி-க்களால் உடல்...
மேலும் படிக்க|மேலும்...