|
| அருந்ததியர்கள் முன்னேற்றம்: விஜயகாந்த் வலியுறுத்தல் |
| சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 4 டிசம்பர் 2008 ( 18:25 IST ) | |
இதர சமுதாயத்தினரோடு போட்டி போட்டு முன்னுக்கு வர அருந்ததியர் சமுதாயத்துக்கென சிறப்புத் திட்டத்தை தமிழக அரசு வகுக்க வேண்டும் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை :
அருந்ததியர்களுக்கு 3 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முன்வந்துள்ளது. அடித்தளத்தில் அவதிப்படும் அத்தகைய மக்களை ஒரு அரசு சமமாக நடத்தினால் மட்டும் போதாது.
அருந்ததியர்கள் வாழும் இடங்கள் ஊரின் ஒதுக்குப் புறங்களாக உள்ளன. எத்தனையோ முறை முதல்வர் கருணாநிதியும், ஜெயலலிதாவும் மாறி, மாறி ஆட்சிக்கு வந்தபிறகும் கூட இப்போது தான் அருந்ததியர்களுக்கு 3 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கும் முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது.
இதையும், அரசியல் பகடைக்காயாக இருவரும் ஆக்கியிருப்பது உண்மையில் வருத்தம் அளிக்கும் விடயம். உள்ஒதுக்கீடு கொடுத்தால் மட்டும் போதாது. உயர்நிலைக் கல்வி, வேலைவாய்ப்புகளில் இந்த 3 விழுக்காடு இடத்தை நிரப்பும் அளவுக்கு அருந்ததிய இளைஞர்களைத் தகுதியுள்ளவர்களாக ஆக்க வேண்டும்.
அவர்கள், இதர சமுதாயத்தினரோடு போட்டி போட்டு முன்னுக்கு வர அவர்களுக்கென சிறப்புத் திட்டத்தை வகுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|