|
| வெள்ள அபாயத்தை கட்டுப்படுத்த ரூ.1538 கோடியில் திட்டம் |
| சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 4 டிசம்பர் 2008 ( 18:18 IST ) | |
சென்னை மாநகரத்தில் ஏற்படும் வெள்ள அபாயத்தை கட்டுப்படுத்த ரூ.1538.04 கோடிகளில் வடிகால் பகுதிகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் திட்டத்தின் மாநில அளவிலான எட்டாவது ஒப்பளிப்புக் கூட்டம் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ரூ.2,256 கோடி மதிப்பீட்டிலான 13 திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது.
சென்னை மாநகரத்தில் ஏற்படும் வெள்ள அபாயத்தை கட்டுப்படுத்த ரூ.1538.04 கோடிகளில் சென்னை மாநகராட்சி, பொதுப் பணித்துறை திட்டம் சமர்ப்பித்திருந்தது.
5வது மாநில அளவிலான ஒப்பளிப்புக்குழு சென்னை மாநகராட்சி முழுவதற்கும் முழுமையான ஒரு திட்டத்தை மத்திய அரசிற்கு அனுப்பி இருந்தது.
இதில் மத்திய அரசு சில மாறுதல்கள் கோரியிருந்தது.அதன்படி ரூ.1538.04 கோடியில் திட்டம் சமர்பிக்கப்பட்டது.இதனை மத்திய அரசுக்கு இக்குழு பரிந்துரைத்திட முடிவு செய்யப்பட்டது.
இத்திட்டத்தின் படி ரூ.838.02 கோடியில் சென்னை மாநகராட்சியால் அனைத்து பகுதிகளிலும் வடிகால் வசதிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறையால் ரூ.415.47 கோடியில் திட்டங்களை செயல்படுத்தி நீர் நிலைகளில் வடிகால் வசதியை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|