யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
கோவை: 40 சாயப்பட்டறைகளை மூட உத்தரவு
கோவை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 4 டிசம்பர் 2008   ( 16:27 IST )
கோவை மாவட்டத்தில், சாயக் கழிவுநீரை ஆற்றில் கலக்கச் செய்த 40 சாயப் பட்டறைகளை மூட உத்தரவிட்டு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கோவை மாவட்டம் தெலுங்குபாளையம் அருகே இயங்கி வரும் சாயப்பட்டறைகள், தங்களது ஆலையில் இருந்து வரும் கழிவுநீரை ராஜா கால்வாயில் கலக்கச் செய்வதாக பொது மக்களும், விவசாயிகளும் மாவட்ட ஆட்சித் தலைவர் பழனி குமாரிடம் புகார் அளித்திருந்தனர்.

இந்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும்படி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை, மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து அப்பகுதியில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் தெலுங்கு பாளையத்தில் உள்ள சாயப் பட்டறைகள் சாயக் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் ஆற்றில் கலக்கச் செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து அங்குள்ள 40 சாயப்பட்டறைகளை உடனடியாக மூடுமாறு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டது. அந்த ஆலைகளின் மின் இணைப்பும் உடனடியாக துண்டிக்கப்பட்டது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மக்களவை தேர்தல் திருப்பு முனையை தரும்: ஜெ.
தூத்துகுடி: இரண்டு விபத்தில் 6 பேர் பலி
மேட்டூர் அணை நீர்மட்டம் 83 அடி
நடிகர் பிரபுதேவா மகன் மரணம்
பெரியாறு அணை: நாடாளுமன்றக்குழு முடிவுக்கு தமிழகம் எதிர்ப்பு
அதிமுக கூட்டணி: மார்க்சிஸ்ட் இன்று ஆலோசனை
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...