|
| மக்களவை தேர்தல் திருப்பு முனையை தரும்: ஜெ. |
| சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 4 டிசம்பர் 2008 ( 15:33 IST ) | |
வரும் மக்களவைத் தேர்தல் அதிமுகவுக்கும், நாட்டுக்கும் பெரும் திருப்புமுனையாக இருக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் மகன் ஆனந்த மகேஸ்வரன் - வளர்மதி ஆகியோரின் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பங்கேற்று மணமக்களை வாழ்த்திப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி தரும் நிகழ்ச்சி. இதேபோல் விரைவில் மக்களும் ஒரு திருப்பத்தை சந்திப்பார்கள். வரும் மக்களவைத் தேர்தல் அதிமுகவுக்கு மட்டும் இன்றி, தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தித் தரும்.
அதிமுக பெரும் அரசியல் இயக்கம் மட்டுமல்ல ; ஒவ்வொருவருக்கும் அடையாளத்தை தந்துள்ளது. சமுதாயத்தில் முகவரி கொடுத்துள்ளது.கட்சித் தொண்டர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்.
இன்றைய ஆட்சியாளர்கள் மீது மக்கள் அதிருப்தியிலும் கோபத்திலும் உள்ளனர்.மத்தியிலும், மாநிலத்திலும் எப்போது தேர்தல் வரும் என்று காத்திருக்கிறார்கள். அதிமுக சார்பில் எவரை நிறுத்தினாலும் வெற்றி உறுதி என்று பொது மக்களும், ஊடகங்களும் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் தகுதியானவர்கள் பலர் இருந்தாலும் கூட்டணி கட்சிகளையும் சேர்த்து 39 இடங்களுக்கு மட்டும் தான் வாய்ப்பு கொடுக்க முடியும். சீட்டு கேட்டு போட்டா போட்டியிடுவது தவறில்லை. ஆனால் அது கட்சியின் வெற்றியை பாதிக்கக் கூடாது.
எனவே தொண்டர்கள் அனைவரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக வெற்றிக்கு பாடுபட வேண்டும். அனைவரும் ஒற்றுமையாகப் பணியாற்றி, எந்த வேட்பாளர் நின்றாலும் நானே நிற்பதாகக் கருதி வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|