|
| தூத்துகுடி: இரண்டு விபத்தில் 6 பேர் பலி |
| தூத்துக்குடி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 4 டிசம்பர் 2008 ( 15:10 IST ) | |
தூத்துக்குடி அருகே இன்று நடந்த இரண்டு வெவ்வேறு சாலை விபத்துக்களில் 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
ஒட்டப்பிடாரத்தை அடுத்து, தூத்துகுடி- மதுரை நெடுஞ்சாசாலையில் உள்ள எப்போதும் வென்றான் அருகே சென்று கொண்டிருந்த லாரி, இன்று அதிகாலை திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த ஆம்னி வேன் மீது மோதியது.
இதில் வேன் நொறுங்கியது. அதில் பயணம் செய்த இளையராஜா (27), ராமச்சந்திரன் (28), ஓட்டுனர் கணேசன் (47) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர்.
இதேபோல் ஆத்தூர் அருகே தூத்துகுடி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோர குளத்தில் பாய்ந்தது.
இதில், தூத்துக்குடியைச் சேர்ந்த பொறியாளர் சுடலையாடி (52), அவரது மனைவி சங்கரி (46), மகன் சுடர் சபரி (12) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மற்றொரு மகன் சிவரான் மட்டும் உயிர் தப்பினார்.
இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|