|
| மேட்டூர் அணை நீர்மட்டம் 83 அடி |
| திருச்சி (ஏஜென்சி), 4 டிசம்பர் 2008 ( 14:18 IST ) | |
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 83.860 அடியாக இருந்தது.அணைக்கு 11,788 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்த கன மழையைத் தொடர்ந்து கடந்த மாதம் 27 ஆம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் அணையில் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறித்து பொதுப்பணி வட்டாரங்கள் வெளியிட்ட தகவல்:
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 15,000 கன அடியில் இருந்து, நேற்று 11,685 ஆகக் குறைந்திருந்தது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வரும் நீரின் அளவு 11,788 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 83.860 அடியாக இருந்தது. தொடர்ந்து 10-வது நாளாக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|