|
| நடிகர் பிரபுதேவா மகன் மரணம்
|
| சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 4 டிசம்பர் 2008 ( 12:25 IST ) | |
பிரபல நடிகர் பிரபுதேவாவின் மகன் விஷால், உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 13.
நடனக் கலைஞரும் பிரபல நடிகருமான பிரபுதேவா - லதா தம்பதியருக்கு விஷால், ரிஷி, ராகவேந்திரா, ஆதித் தேவா என்ற 4 மகன்கள்.
இவர்களில் விஷாலுக்கு சில மாதங்களுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை மருத்துவமனை ஒன்றில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று அதிகாலை விஷாலின் உடல்நிலை மோசமானது. இதையடுத்து சிகிச்சை பலனின்றி விஷாலின் உயிர் பிரிந்தது. தற்போது அவரது உடல் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய், அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் உட்பட திரையுலகப் பிரமுகர்கள் ஏராளமானோர் விஷாலின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். விஷாலின் உடல் இன்று மாலை பெசன்ட் நகரில் அடக்கம் செய்யப்படும் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|