யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
பெரியாறு அணை: நாடாளுமன்றக்குழு முடிவுக்கு தமிழகம் எதிர்ப்பு
சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 4 டிசம்பர் 2008   ( 12:25 IST )
முல்லை பெரியாறு அணை தொடர்பாக நாடாளுமன்றக் குழு தெரிவித்த கருத்தை தமிழகம் ஏற்கவில்லை என்று பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: சாம்பசிவராஜ் தலைமையில் நாடாளுமன்ற நிலைக்குழுவினர் கடந்த 1 ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையைப் பார்வையிட்டனர். அவர்கள் சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே அங்கு இருந்து அணையை ஆய்வு செய்தனர்.

அதற்குள்ளாகவே முல்லைப் பெரியாறு பலவீனமாக உள்ளதென்ற முடிவுக்கு அவர்கள் வந்து, அணை உடைந்தால் கேரளாவின் 5 மாவட்டங்கள் அழிந்துவிடும். எனவே புதிய அணை கட்ட வேண்டும் என்று கருத்து தெரிவித்ததாக, பத்திரிக்கையில் செய்திகள் வெளியாகியுள்ளன.

10 நிமிடங்கள் மட்டுமே அணையைப் பார்வையிட்டு அணை பலவீனமாக இருக்கிறது என்ற நாடாளுமன்ற நிலைக் குழுவின் கருத்தை தமிழகம் ஏற்கவில்லை. இது தொடர்பாக தமிழகத்தின் ஆட்சேபனை மத்திய அரசுக்கு தெரியப்படுத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அதிமுக கூட்டணி: மார்க்சிஸ்ட் இன்று ஆலோசனை
அனைத்து கட்சிக் குழுவுடன் டெல்லி சென்றார் கருணாநிதி
இலங்கை சிறையிலிருந்து தமிழக மீனவர்கள் 21 பேர் விடுதலை
ஆர்.சி.வி மீதான வழக்கு : வாபஸ் பெற்றது சன் டிவி
மாறன் குடும்பத்தினருடன் சமரசம் : கருணாநிதிக்கு ஜெ. கேள்வி
சென்னை விமான நிலையத்துக்கு கமாண்டோ பாதுகாப்பு
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...