யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
இலங்கை சிறையிலிருந்து தமிழக மீனவர்கள் 21 பேர் விடுதலை
ராமேஸ்வரம் / கொழும்பு( ஏஜென்சி), புதன்கிழமை, 3 டிசம்பர் 2008   ( 19:23 IST )
இலங்கை கட‌ற்படை‌யினரா‌ல் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட 21 த‌மிழக ‌மீனவ‌ர்க‌‌ளி‌ன் த‌ண்டனை கால‌ம் முடிவடை‌ந்ததையடு‌த்து அவ‌ர்களை ‌விடுதலை செ‌ய்ய அந்நாட்டு ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

கடந்த நவ‌ம்ப‌ர் மாதம் 25ஆ‌ம் தேதி ராமே‌ஸ்வரத்தை சேர்ந்த ராமமூர்த்தி, கோவிந்தா, சுந்தர், காளிமுத்து ஆகியோ‌ர் க‌ச்ச‌‌த்‌தீவு அருகே ‌மீ‌ன்‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த போது அவ‌ர்களை ‌இலங்கை கட‌ற்படை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர்.

இதேபோல் கட‌ந்த மாத‌ம் 18ஆ‌ம் தே‌தி புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டிணத்தை சேர்ந்த 17 மீனவர்கள், நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது அவர்களை ‌‌இலங்கை கடற்படை‌யின‌ர் கைது செ‌ய்து படகுகளை ப‌றிமுத‌ல் செ‌ய்தன‌ர்.

இவ‌ர்க‌ள் ‌எல்லை தாண்டி வந்த குற்றச்சா‌ற்றின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இவர்களது தண்டனைக் காலம் முடிவடை‌ந்ததையடுத்து 21 மீனவர்களும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இலங்கை‌ சப்னா ‌நீ‌திம‌ன்‌ற‌த்த‌ி‌ல் ஆஜ‌ர்படு‌த்த‌ப்ப‌ட்டன‌ர்.

அ‌ப்போது, 21 மீனவர்களை விடுதலை செய்யுமாறும், அவர்களுடைய படகுகளை வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து தமிழக மீனவர்கள் 21 பேரும் நாளை இந்திய கடலோர காவல்படையினரால் மண்டபம் அழைத்து வரப்படுகிறார்கள்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஆர்.சி.வி மீதான வழக்கு : வாபஸ் பெற்றது சன் டிவி
மாறன் குடும்பத்தினருடன் சமரசம் : கருணாநிதிக்கு ஜெ. கேள்வி
சென்னை விமான நிலையத்துக்கு கமாண்டோ பாதுகாப்பு
தமிழக மீனவ‌ர்க‌ளை தாக்கி இலங்கை கடற்படை கொள்ளை
மதுரையில் 3 ரவுடிகள் வெட்டிக் கொலை
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...