|
| ஆர்.சி.வி மீதான வழக்கு : வாபஸ் பெற்றது சன் டிவி |
| சென்னை(ஏஜென்சி), புதன்கிழமை, 3 டிசம்பர் 2008 ( 16:20 IST ) | |
சட்டவிரோதமாக சன் டிவி சிக்னல்களை பதிவு செய்து ஒளிபரப்பியதாக மு.க. அழகிரியின் ராயல் கேபிள் விஷனுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை சன் நெட்வொர்க் இன்று திரும்ப பெற்றுக் கொண்டது.
அனுமதி இல்லாமல் சன் டிவி சிக்னல்களை பதிவு செய்து ஒளிபரப்பியது உள்ளிட்ட பல்வேறு புகார்களை ராயல் கேபிள் விஷன் நிறுவனத்தின் மீது சன் குழுமம் தெரிவித்தது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்," மதுரையை சேர்ந்த ராயல் கேபிள் விஷன் நிறுவனம் எங்களிடம் அனுமதி பெறாமல் சன் டிவியின் சிக்னல்களை சட்டவிரோதமாக பதிவு செய்து உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலம் ஒளிபரப்பு செய்து வருகிறது.இது சட்டவிரோதமாகும்.
இதனை தடுத்துநிறுத்தக் கோரி பல முறை கடிதம் வாயிலாகவும், நேரடியாகவும் நடவடிக்கை எடுத்தும் எந்த பலனும் இல்லை.இது மட்டுமல்லாது இது குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த போதும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே சட்டவிரோதமாக சன் டிவி சிக்னல்களை பதிவு செய்து ஒளிபரப்பி வரும் ராயல் கேபிள் விஷன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில்,சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் முன்பு இன்று காலை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது சன் டிவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ராயல் கேபிள் விஷனுக்கு எதிராக சன் நெட்வொர்க் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.
முதலமைச்சர் கருணாநிதி குடும்பத்தினருக்கும் மாறன் சகோதரர்களுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியான நிலையில், இந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|