யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
சென்னை விமான நிலையத்துக்கு கமாண்டோ பாதுகாப்பு
சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 3 டிசம்பர் 2008   ( 14:04 IST )
மும்பை தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக சென்னை விமான நிலையத்துக்கு கமாண்டோப் படை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

துணை ஆய்வாளர் தலைமையில் 6 கமாண்டோ வீரர்கள் கொண்ட குழு, சுழற்சி முறையில் 24 மணி நேரமும் விமான நிலையத்தில் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளும்.

இந்த வீரர்கள் எத்தகைய தாக்குதலையும், நிலைமையையும் எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு பயிற்சிகளைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

இவர்களைத் தவிர இந்தோ- திபெத் கமாண்டோ படை, மத்திய தொழில் பாதுகாப்பு உள்ளிட்ட பாதுகாப்பு படையினரும் சென்னை விமான நிலையத்தின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களும், நபர்களும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள். ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் அனைத்து நுழைவாயில்களிலும் மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தப்பட்டு, பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

சென்னை விமான நிலையம் எதிரே புதியதாகக் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் இருந்தபடி விமானங்களை பொது மக்கள் பார்த்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தற்போது இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை, மதுரை, திருச்சி விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தமிழக மீனவ‌ர்க‌ளை தாக்கி இலங்கை கடற்படை கொள்ளை
மதுரையில் 3 ரவுடிகள் வெட்டிக் கொலை
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை
வெள்ள நிவாரணம் சென்றடையவில்லை: விஜயகாந்த்
அனைத்து கட்சி குழு இன்று டெல்லி பயணம்
‌திருச்சி : மழையா‌ல் ரூ.151 கோடி சேதம்
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...