|
| மதுரையில் 3 ரவுடிகள் வெட்டிக் கொலை |
| மதுரை (ஏஜென்சி), புதன்கிழமை, 3 டிசம்பர் 2008 ( 11:06 IST ) | |
மதுரையில் முன் விரோதம் காரணமாக 3 ரவுடிகள் நேற்று மாலை வெட்டி கொலை செய்யப்பட்டனர். இச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை கீரைத்துறையை சேர்ந்த முனூஸ், 2003 ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் மாரிமுத்து என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
நேற்று மாலை 6.30 மணி அளவில் மாரிமுத்து, தனது அண்ணன் மூர்த்தி (37), ரமேஷ் (27) ஆகியோருடன் ஹவுசிங் போர்டு காலனி அடுத்துள்ள புதர் பகுதியில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சிலர், மாரிமுத்து உள்ளிட்ட 3 பேர் மீது பயங்கர ஆயுதங்களால் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர். தப்பியோட முயன்ற போது மாரிமுத்து, ரமேஷ் ஆகியோர் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
படுகாயம் அடைந்தநிலையில் இருந்த மூர்த்தி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார்.
இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவனியாபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதால் பழிக்கு பழி வாங்கும் நோக்கில் இந்த கொலை நடந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். குற்றவாளிகளைப் பிடிக்க மூன்று காவல்துறை தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|