|
| மழை நீர் தேங்காமல் இருக்க 1600 கோடியில் திட்டம்! |
| சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 1 டிசம்பர் 2008 ( 16:21 IST ) | |
சென்னையில் மழை நீர் தேங்காமல் இருக்க ரூ.1600 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னை மாநகராட்சியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் கூறியதாவது:
கடந்த சில ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் தற்போது பெரியளவில் மழை பெய்துள்ளது. கடந்த 2005ம் ஆண்டு பெய்த மழையை விடவும் தற்போது இரு மடங்கு அதிகமாக பெய்துள்ளது. எனினும் மழை வெள்ளப் பாதிப்பு பெரிய அளவில் இல்லை.
முதல்வர் கருணாநிதி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரது ஆலோசனையின் பேரில், மாநகராட்சியும், பல்வேறு அரசு துறைகளும் நடவடிக்கைகள் மேற்கொண்டன. இதனால் 2 நாட்களில் மழை வெள்ளம் வடிந்துள்ளது.
கடந்த 2005ல் கோட்டூர்புரத்தில் 7 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது. ஆனால் இப்போது 2 அடி தண்ணீர் மட்டுமே தேங்கியது. நிவாரணப் பணிகளுக்கு 40 கட்டு மரங்களும், மோட்டார் படகுகளும் பயன்படுத்தப்பட்டன.
மழை வெள்ளம் வடிந்துவிட்ட நிலையில் குப்பைகளையும், சகதியையும் அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 142 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு 29 ஆயிரத்து 419 பேருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது.
சென்னை ௦அப்பல்லோ மருத்துவமனை, ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் பில்ராத் மருத்துவமனை ஆகியவற்றுடன் மாநகராட்சி இணைந்து, சென்னையில் வரும் 7ந் தேதி 30 இடங்களில் மெகா மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளது. அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த முகாம்கள் நடைபெறும்.
வருங்காலத்தில் சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காமல் இருக்கும் வகையில் ரூ.1600 கோடி செலவில் திட்ட மதிப்பீடு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் இதற்கான பணிகள் துவங்கும்.
தற்போதைய மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க ரூ.60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் இந்தப் பணிகள் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|