|
| கருணாநிதியின் மாயவலை: ஜெ. தாக்கு |
| சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 1 டிசம்பர் 2008 ( 16:02 IST ) | |
'அருந்ததியருக்கான இட ஒதுக்கீட்டை நான் எதிர்ப்பதுபோல ஒரு மாயதோற்றத்தை கருணாநிதி உருவாக்கியுள்ளார். அவரது மாயவலையில் மக்கள் விழ வேண்டாம்' என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
தாழ்த்தப்பட்ட மக்களுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக 3 சதவீதம் அருந்ததியருக்கு ஒதுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்திருப்பது ஒரு அரசியல் மோசடி என்றும், நான் ஆட்சிக்கு வந்த பிறகு புதிதாக பதவியேற்கும் மத்திய அரசிடம் வாதாடி அவர்களுக்கு தேவையான இடஒதுக்கீட்டை பெற்றுத் தருவேன் என்றும் அறிக்கை வெளியிட்டிருந்தேன்.
இதை பொறுத்துக்கொள்ள முடியாத கருணாநிதி, நான் அருந்ததியருக்கான இடஒதுக்கீட்டை எதிர்க்கிறேன் என்பது போல் ஒரு மாயதோற்றத்தை உருவாக்கியுள்ளார்.
ஆனால் கடந்த 10 ஆண்டு காலமாக மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கருணாநிதி, அருந்ததியருக்கான உள்ஒதுக்கீடு குறித்து ஏன் வற்புறுத்தவில்லை?
உண்மையிலேயே அவருக்கு அருந்ததியர்கள் மீது அக்கறை இருந்திருந்தால் 1999ம் ஆண்டு முதல் 2004 வரை மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி இருந்தபோது செய்திருக்கலாம். அல்லது 2004ல் காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசு அமைந்தவுடன் செய்திருக்கலாம். அல்லது 2006ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்றவுடன் மத்திய அரசிடம் போராடி பெற்றுக்கொடுத்திருக்கலாம்.
ஆனால், மத்திய அரசின் ஆயுட்காலம் இன்னும் 3 மாத காலத்தில் முடியும் தருவாயில் இது போன்று அறிவித்திருப்பதால் தான் இதை ஓர் அரசியல் மோசடி என்று நான் குறிப்பிட்டேன்.
அருந்ததியர்களுக்கான உள் ஒதுக்கீடு முறையாக செய்யப்பட வேண்டுமென்றால் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்ற பிறகே செய்ய முடியும். தேர்தலுக்காக அறிவிப்பு வெளியிட்டு மக்களை ஏமாற்றும் கருணாநிதியின் மாயவலையில் யாரும் விழ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|