|
| ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு தீவிரம் |
| ராமேஸ்வரம் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 1 டிசம்பர் 2008 ( 15:27 IST ) | |
கடல் மார்க்கமாக வந்து மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து ராமேஸ்வரம் பகுதியில் கடலோரப் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய கடற்படை கிழக்குப் பிராந்தியத் துணைத் தளபதி சதீஷ் சோனி தலைமையிலான குழு, ராமேஸ்வரம் கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்று மதிப்பீடு செய்தது.
மன்னார் வளைகுடா, தனுஷ்கோடி, தொண்டி ஆகிய பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் அந்த குழுவினர் சுற்றிப் பார்த்தனர். இது தவிர நவீன ரக படகுகள் மூலம் கடலோர காவல் படையினர் 24 மணி நேர தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் ராமேஸ்வரம் - மண்டபத்தை இணைக்கும் பாம்பன் பாலத்திலும் சோதனைகள் பலப்படுத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாம்பன் பாலத்தில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் காவல்துறையினரால் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|